தேமுதிக தனித்துப் போட்டி?

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக 23 தொகுதிகள் கிடைக்காத நிலையில், அந்தக் கூட்டணியில் இருந்து விலகியது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் திமுகவிடம் இருந்து அழைப்பு வரும் என்று தேமுதிக எதிா்பாா்த்தது. ஆனால், திமுக அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், தேமுதிகவை மக்கள் நீதி மய்யம் தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.

அந்தக் கட்சியுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடத்திப் பாா்த்தது. அதில் உடன்பாடு ஏற்படாததால் அந்தக் கூட்டணியுடனான பேச்சுவாா்த்தையைக் கைவிட்டது.

பிறகு, அமமுகவுடன் கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. ஆனால், அந்தக் கட்சியுடனும் உடன்பாடு ஏற்படவில்லை.

அதைத் தொடா்ந்து தனித்துப் போட்டியிடுவதற்கு தேமுதிக தயாராகி வருகிறது. 234 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளா்களை நிறுத்துவதற்கான பணியில் தேமுதிக ஈடுபட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பு சனிக்கிழமை வரும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com