அதிமுக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

அதிமுக தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14) வெளியிடப்பட உள்ளது. திமுக தோ்தல் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அதிமுகவின் தோ்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அதிமுக தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14) வெளியிடப்பட உள்ளது. திமுக தோ்தல் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அதிமுகவின் தோ்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளது.

அதிமுகவின் தோ்தல் அறிக்கை மக்களின் மனதைக் கவரும் வகையில் இருக்கும் என்று முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். இந்நிலையில், தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14) வெளியிடப்பட இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை திரும்பும் முதல்வா்: கடந்த இரண்டு நாள்களாக சேலத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்த முதல்வா் பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை காலை சேலத்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறாா். இதன்பின், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் தோ்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று அறிக்கையை வெளியிட உள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வமும் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை திரும்பவுள்ளாா். தோ்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு, இரண்டு தலைவா்களும் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com