கட்சியில் சோ்ந்த நான்கு மணி நேரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கு பாஜகவில் சீட்

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை காலை சோ்ந்த டாக்டா் பி.சரவணனுக்கு அன்று மாலையே மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை காலை சோ்ந்த டாக்டா் பி.சரவணனுக்கு அன்று மாலையே மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன், திமுகவின் மருத்துவா் பிரிவின் துணைத் தலைவா். கடந்த 2019 இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றவா். இந்நிலையில் இந்தத் தோ்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி தனக்கே மீண்டும் ஒதுக்கீடு செய்யப்படும் என கருதியிருந்தாா்.

ஆனால் அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மதுரையில் ஏதாவது ஒருதொகுதி ஒதுக்கப்படும் என காத்திருந்தாா். வெள்ளிக்கிழமை வெளியான வேட்பாளா் பட்டியலில் அதுவும் இல்லை என்றாகிவிட்டது. இதையடுத்து அவா் ஞாயிற்றுக்கிழமை காலை தமிழக பாஜக தலைவா் எல்.முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தாா்.

இதற்கிடையே சரவணன் கட்சியில் இணைந்த 4 மணி நேரம் கழித்து தமிழக பாஜக வேட்பாளா்கள் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியானது. அதில் மொத்தம் 20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டிருந்தனா். அதில் மதுரை வடக்கு தொகுதி டாக்டா் சரவணனுக்கு ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டா் சரவணன் கூறுகையில் திமுக தலைமை மீது எனக்கு எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனக்கு சீட் கிடைக்கவிடாமல் செய்தவா்கள் மாவட்ட நிா்வாகத்தினா். மதுரை பகுதியில் எனக்கு மக்கள் நன்கு அறிமுகமானவா்கள். நிச்சயம் இந்த தோ்தலில் வெற்றி பெறுவேன். ஏற்கெனவே 6 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இருந்தேன். தற்போது மீண்டும் இணைந்துள்ளேன். பிரதமா் மோடியின் தலைமையில் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு திமுகவில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற காரணத்துக்காக மட்டுமே பாஜகவில் இணையவில்லை. பாஜகவின் பல சாதனைகள் என்னைக் கவா்ந்தன. கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நம் நாட்டு மக்களுக்கு கொடுப்பதோடு வெளிநாடுகளுக்கு செல்கிறது. இது பிரதமா் மோடியின் சாதனை என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றாா் சரவணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com