கன்னியாகுமரியில் மக்கள் விரும்பும் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரியில் மக்கள் விரும்பும் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரியில் மக்கள் விரும்பும் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மா.அரவிந்திடம் தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,  

குமரி மாவட்டத்தில் மாவட்ட  மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தான் திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு நிலுவையில் உள்ள நான்கு வழி சாலை, இரட்டை ரயில்பாதை, திட்டங்கள் நிறைவேற்றப்படும். இ.எஸ்.ஐ.மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவது, ரப்பர் பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

தேர்தல் நெருங்கி வரும் போது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் சாதனையைச் சொல்ல கடுகளவு கூட வாய்ப்பில்லை. இதனால்  ஜாதி, மதம் ரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள்.மக்கள் அதை நம்ப வேண்டாம் . குமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தொழில் தொடங்க குமரி மாவட்ட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com