அதிமுகவின் தேர்தல் அறிக்கை காமெடி வில்லன்:  ஸ்டாலின் பேச்சு

அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லன் அல்ல காமெடி வில்லன் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறினார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை காமெடி வில்லன்:  ஸ்டாலின் பேச்சு
அதிமுகவின் தேர்தல் அறிக்கை காமெடி வில்லன்:  ஸ்டாலின் பேச்சு


மதுரை: அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லன் அல்ல காமெடி வில்லன் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறினார்.

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் திமுக வேட்பாளர்கள் மதுரை மேற்கு சின்னம்மாள், மதுரை வடக்கு கோ தளபதி, மதுரை மத்தி பழனிவேல் தியாகராஜன், மதுரை தெற்கு மதிமுக வேட்பாளர் பூமிநாதன் ஆகியோரை  ஆதரித்து புதன்கிழமை தேர்தல் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியது, நான் திமுகவில் அடிமட்ட உறுப்பினர் வட்ட பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞரணி செயலர், துணை பொதுச்செயலர், பொருளாளர், செயல் தலைவர் என படிப்படியாக உயர்ந்து இப்போது கட்சியின் தலைவர் பொறுப்பில் உள்ளேன். நான் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. இந்த கட்சியின் அடிமட்ட பொறுப்பிலிருந்து பணியாற்றி படிப்படியாக தலைமை பொறுப்புக்கு வந்துள்ளேன். அதேபோல எம்எல்ஏ, மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என மக்களுக்காக உழைத்துள்ளேன்.

இப்போது முதல்வர் வேட்பாளராக வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.  ஆகவே மக்களிடம் வாக்கு கேட்க எனக்கு முழு உரிமை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் பாழாகிப்போய் கிடைக்கிறது. மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, அத்திவசியப்பொருள்கள் விலையேற்றம் என பொதுமக்கள் கடும் நெருக்கடியில் இருந்து வருகின்றனர். 
இந்த நிலையை மாற்றி தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக திமுக தொலைநோக்கு திட்டத்தை அறிவித்திருக்கிறது. திமுக ஆட்சி அமைந்ததும் அடுத்த பத்தாண்டுகளில் இந்த தொலைநோக்கு திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

திமுக அறிவித்த திட்டங்களையெல்லாம் காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையை வில்லன் என்று கூறுவதைக் காட்டிலும், காமெடி வில்லன் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்.

வரும் தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. அதிமுக வெற்றி பெறுவதும் பாஜக வெற்றி பெறுவதும் ஒன்றுதான். ஏனெனில் இப்போது அதிமுகவினர் தான் பாஜகவினரை போல செயல்பட்டு வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு ஒரேயொரு மக்களவை உறுப்பினர் மட்டுமே  உள்ளார் . அவரும் பாஜக உறுப்பினராகவே செயல்பட்டு வருகிறார். ஆகவே தமிழகம் வளர்ச்சி பெறவும் மக்களுக்கு நலத் திட்டங்கள்  கிடைக்கவும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com