கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் வேட்புமனு தாக்கல்

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் வேட்புமனு தாக்கல்

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் பாமக வேட்பாளராக பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி அத்திப்பேடு பகுதியைச் சேர்ந்த பாமக மாநில துணை பொதுச்செயலாளர் எம்.பிரகாஷ் அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் வெங்கட்ரமணா, கோவி.நாராயணமூர்த்தி, ஓ.எம்.கிருஷ்ணன், முல்லைவேந்தன், மு.க.சேகர், தன்ராஜ், எஸ்.எம்.ஸ்ரீதர், தீனதயாளன், பாஜக மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா, மாவட்டச் செயலாளர் சரவணன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே.மாரிமுத்து மற்றும் கூட்டணிக் கட்சியினர், பாமக நிர்வாகிகள் என 500 பேர் ஊர்வலமாக பெத்திக்குப்பம் வழியே கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் ஜி.பாலகுருவிடம், உதவி தேர்தல் அலுவலர்கள் கும்மிடிப்பூண்டி ந.மகேஷ், ஊத்துக்கோட்டை கே.என்.குமார் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். நிகழ்வின்போது கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா உடனிருந்தனர்.

மேலும் நிகழ்வின்போது பாமக மாற்று வேட்பாளராக கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் எம்.பிரகாஷின் மனைவி பி.நிர்மலா வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் மனு தாக்கல் செய்ததை ஒட்டி பாமக நிர்வாகி க.ஏ.ரமேஷ், மாவட்டச் செயலாளர் குபேந்திரன் பாமக நிர்வாகிகள் சங்கர், கேசவன் மற்றும் அதிமுக, பாஜக, தாமக, புரட்சிபாரதம் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com