சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் கே.எம். ராஜேஷ், சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலரிடம்  புதன்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தார். 
சங்ககிரியில் தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பனிடம்  வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்  திமுக வேட்பாளர் கே.எம்.ராஜேஷ்.
சங்ககிரியில் தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் திமுக வேட்பாளர் கே.எம்.ராஜேஷ்.

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் கே.எம். ராஜேஷ், சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலரிடம்  புதன்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் கே.எம்.ராஜேஷ்,  சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி, முன்னால் எம்எல்ஏ வை.காவேரி ஆகியோர் உடனிருந்தனர். 

முன்னதாக சங்ககிரி ஒன்றிய திமுக அலுவலகத்திலிருந்து திமுக முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, மகுடஞ்சாவடி ஒன்றியச் செயலர் பச்சமுத்து, மேற்கு மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் ஆர்.அருள்பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்ககிரி வட்ட குழுத்தலைவர் எஸ்.கே.சேகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பெஞ்சமின், கொமதேக ஒன்றியச்செயலர்கள் சரவணன், ராஜ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பெருமாவளவன் உள்ளிட்ட  திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com