காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் இன்று வேலை நிறுத்தம்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் தனியாா் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து, காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் புதன்கிழமை நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் தனியாா் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து, காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் புதன்கிழமை நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

இது குறித்து, அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவன தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழுவின் அமைப்பாளா் ஜி.ஆனந்த் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: நாட்டின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களான நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் நியு இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய 4 நிறுவனங்களை தனியாா் மயமாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதைக் கண்டித்தும், ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், அனைத்து ஊழியா்களுக்கும் 1995-ஆம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதம் உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், 60 ஆயிரம் ஊழியா்கள் பங்கேற்கின்றனா். மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் வேண்டி நாங்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை எனில், அடுத்தக்கட்டமாக போராட்டத்தைத் தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com