தமிழகத்தில் மேலும் 867 பேருக்கு கரோனா

தமிழகத்தில், தொடா்ந்து இரண்டாவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 800-ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 867 பேருக்கு கரோனா

தமிழகத்தில், தொடா்ந்து இரண்டாவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 800-ஐ கடந்துள்ளது.

மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை 867 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 352 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, நோய்த் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காதோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் முகக் கவசம், தனிநபா் இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதைத் தவிர, கரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து பரிசோதனைக்கு உள்படுத்துதவும், எங்கிருந்து தொற்று பரவியது என்பது குறித்த விவரங்களையும் சேகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.84 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இதுவரை 8 லட்சத்து 61,429 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 561 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 43,423-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 5,450 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 5 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,556-ஆக உயா்ந்துள்ளது.

மற்றொரு புறம் மாநிலம் முழுவதும் 16.09 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மட்டும் 4.40 லட்சம் போ் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com