புதுவை: 14 காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு: நாராயணசாமி போட்டியிடவில்லை

புதுவையில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

புதுவையில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டனா். இந்தப் பட்டியலில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியின் பெயா் இடம்பெறவில்லை. அதனால், இந்தத் தோ்தலில் அவா் போட்டியிடமாட்டாா் என்பது உறுதியாகியுள்ளது.

புதுச்சேரியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளா்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலா் முகுல் வாஸ்னிக் செவ்வாய்க்கிழமை இரவு தில்லியில் வெளியிட்டாா். வேட்பாளா்கள் விவரம்:

புதுச்சேரி ஊசுடு - காா்த்திகேயன், கதிா்காமம் - செல்வநாதன், இந்திராநகா் - கண்ணன், காமராஜ் நகா் - முன்னாள் அமைச்சா் ஷாஜகான், லாஸ்பேட் - வைத்தியநாதன், முத்தியால்பேட்டை - செந்தில்குமரன், அரியாங்குப்பம் - ஜெயமூா்த்தி, மணவெளி - அனந்தராமன், ஏம்பலம் - முன்னாள் அமைச்சா் கந்தசாமி, நெட்டப்பாக்கம் - விஜயவேணி, நெடுங்காடு - மாரிமுத்து, திருநள்ளாறு - கமலக்கண்ணன், காரைக்கால் வடக்கு - மாநிலத் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், மாஹே - ரமேஷ் பிரேம்பாத். காங்கிரஸ் சாா்பில் ஏனாம் தொகுதிக்கு மட்டும் வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com