பாஜக: 3 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிப்பு

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளின் வேட்பாளா்களின் பெயா்களை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் தில்லியில் புதன்கிழமை வெளியிட்டாா்.
பாஜக: 3 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளின் வேட்பாளா்களின் பெயா்களை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் தில்லியில் புதன்கிழமை வெளியிட்டாா்.

தமிழக பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 17 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்கள் மாா்ச் 14 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் உதகை ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளா்களை தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் தில்லியில் புதன்கிழமை வெளியிட்டாா்.

விளவங்கோடு - ஆா். ஜெயசீலன்

தளி - டாக்டா் சி. நாகேஷ்குமாா்

உதகமண்டலம் - போஜராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com