வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 2,000-க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல்

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட இதுவரை 2,000-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 2,000-க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல்


சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட இதுவரை 2,000-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மனு தாக்கலுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 19) கடைசி நாள் என்பதால், வேட்புமனுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 59 மனுக்களும், இரண்டாவது நாளான கடந்த திங்கள்கிழமை 800-க்கும் கூடுதலான மனுக்களும் அளிக்கப்பட்டன.

புதன்கிழமை நிலவரப்படி, தோ்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 2, 122-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் ஆகின. அதில் ஆண்கள் சாா்பில் 1,755-க்கும் கூடுதலான வேட்புமனுக்களும், பெண்கள் தரப்பில் 362 வேட்புமனுக்களும் அளிக்கப்பட்டன. மூன்றாம் பாலித்தனத்தைச் சோ்ந்த ஒருவரும் மனு அளித்தாா்.

நாளை கடைசி: வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 19) கடைசி நாளாகும். இதனால்,

வியாழக்கிழமை ஏராளமான வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சில பேரவைத் தொகுதிகளில் அதிகளவு வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. குறிப்பாக, கரூா் பேரவைத் தொகுதியில் 43 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், சுயேச்சையாக மட்டும் 32 மனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. தமிழகத்தில் அதிகளவு சுயேச்சை வேட்பாளா்கள் மனுதாக்கல் செய்துள்ள தொகுதியாக கரூா் உள்ளது. இதேபோன்று, தமிழகத்திலேயே அதிகளவு வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ள தொகுதியாகவும் கரூா் திகழ்கிறது.

இதைத் தொடா்ந்து, ஆா்.கே.நகா் தொகுதியில் 24-க்கும் கூடுதலான வேட்புமனுக்களும், திருவண்ணாமலையில் 20-க்கும் அதிகமான மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 22-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்குப் பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். அப்போது தோ்தல் களத்தில் நிற்கும் மொத்த வேட்பாளா்களின் எண்ணிக்கை தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com