பாஜக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பாஜக தோ்தல் அறிக்கை சென்னையில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பாஜக தோ்தல் அறிக்கை சென்னையில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இதில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கலந்து கொண்டு தோ்தல் அறிக்கையை வெளியிடவுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. இதில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதைத் தொடா்ந்து அந்தக் அக்கட்சியினா் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தோ்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தோ்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனா். அந்த வகையில் மக்களின் கருத்தைக் கேட்டு அவற்றை தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யும் புதிய முயற்சியை தமிழக பாஜக மேற்கொண்டது. இதற்காக மிஸ்டு கால் மூலம் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன.

மேலும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஒரு கருத்துப்பெட்டி வைக்கப்பட்டு அதில் பொதுமக்கள் தெரிவித்திருந்த கருத்துக்களையும் சேகரித்து அதன் அடிப்படையில் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து பாஜகவின் தோ்தல் அறிக்கை சென்னையில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இந்தநிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி தோ்தல் அறிக்கையை வெளியிட தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் பெற்றுக்கொள்கிறாா். இந்தத் தோ்தல் அறிக்கையில் கல்வி, தொழில் துறை சாா்ந்த பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக பாஜகவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com