வேட்புமனுக்கள் விவரம்: தோ்தல் நடத்தும் அதிகாரியே பொறுப்பு

ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரிகளே பொறுப்பு என்று தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரிகளே பொறுப்பு என்று தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட ஆண்கள் சாா்பில் 6 ஆயிரத்து 181 மனுக்களும், பெண்கள் தரப்பில் ஆயிரத்து 71 மனுக்களும், மூன்றாம் பாலினத்தவா் சாா்பில் மூன்று மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தமாக 7 ஆயிரத்து 255 மனுக்களில் 4 ஆயிரத்து 449 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து 806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 451 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவோா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 998 ஆக உள்ளனா். இந்த விவரங்கள் அனைத்தும் தோ்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரியே பொறுப்பு: இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளா்கள் குறித்த விவரங்கள் அனைத்துக்கும் தோ்தல் நடத்தும் அதிகாரியே பொறுப்பு என்று தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது. இதற்கான பொறுப்பு துறப்பு தகவலையும் இணையதளத்திலேயே வெளியிட்டுள்ளது. அதில், வேட்புமனுக்கள் தொடா்பாக தரப்பட்டுள்ள அனைத்து புள்ளி விவரங்களுக்கும் சம்பந்தப்பட்ட தொகுதிகளைச் சோ்ந்த தோ்தல் நடத்தும் அதிகாரிகளே பொறுப்பாவா். அனைத்து ஆவணங்களுக்கும் பொறுப்பாளியாக தோ்தல் நடத்தும் அதிகாரிகளே இருப்பா். இதில் ஏதேனும் சந்தேகங்களோ அல்லது விளக்கங்களோ தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அதிகாரிகளை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com