கும்மிடிப்பூண்டியில் கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளிலும் குருத்தோலை விழா ஊர்வலம் கிறிஸ்துவர்களால் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளிலும் குருத்தோலை விழா ஊர்வலம் கிறிஸ்துவர்களால் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்து சிறுவையில் அறையப்படுவதற்கு முன் அவர் கோவேரி கழுதை மீது அமர்ந்து எருசலேம் நகர் முழுக்க ஊர்வலமாக சென்றார். அப்போது மக்கள் குருத்தோலைகளை ஏந்தி அவரை பாடல்கள் பாடி வரவேற்றனர்.

இந்த நிகழ்வானது உலகெங்கும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறு நிகழ்வாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள நல்மேய்ப்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா பாஸ்டர் இம்மானுவேல் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்வை ஒட்டி ஆலய வாயிலில் கூடிய திரளான கிறிஸ்துவ மக்கள் கையில் குருத்தோலை ஏந்தி ஆரம்பாக்கம் வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அப்போது இயேசுவுக்கு ஓசன்னா என்று குரல் எழுப்பியும் பாடல்கள் பாடியும் சென்றனர். அவ்வாறே ஆரம்பாக்கம் மாதா கோவில் பாதிரியார் பாப்பையா தலைமையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.

அதே போல கும்மிடிப்பூண்டியில் தூய பவுல் ஆலயத்தில் ஆயர் கிருபாகரன் தலைமையில் குருத்தோலை ஞாயிறு நிகழ்வு நடைபெற்றது.

இது குறித்து பாதிரியார் பாப்பையாவிடம் கேட்ட போது எளிமையின் வடிவாக பிறந்த இயேசு வாழும் காலத்தில் எளிமையாகவே வாழ்ந்தார், சிலுவையில் அறையப்படுவதற்கு முன் இதை உறுதி செய்யும் வகையில் எளிய கோவேரி கழுதை மீது சவாரி செய்தார். அதை நினைவு கூறவும் இயேசுவின் ராஜ்ஜியம் என்பதை வலியுறுத்தவும் கோவேரி கழுதை மூலம் ஊர்வலமாக சென்றார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com