கோவில்பட்டி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி 

கோவில்பட்டியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கோவில்பட்டி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
கோவில்பட்டி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

கோவில்பட்டி:  கோவில்பட்டியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயம், தூய பவுலின் ஆலயம் (சி.எஸ்.ஐ) ஆகியவற்றின் சார்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது. தூய பவுலின் ஆலய இறைமக்கள் ஆலய சேகரகுரு தாமஸ், கௌரவகுரு இம்மானுவேல், சபை ஊழியர் மார்க், புனித சூசையப்பர் திருத்தல பங்குதந்தை அலோசியஸ் துரைராஜ் உதவி பங்கு தந்தை ஜேக்கப், அருள் சகோதரர் அருள் ஆகியோர தலைமையில் இறைமக்கள் குருத்தோலை ஏந்திய வண்ணம் ஓசானா கீதம் பாடியவாறு தூய பவுலின் ஆலயம் முன்பிருந்து புறப்பட்டனர். 

கையில் குருத்தோலையை ஏந்தியவண்ணம் இறை பாடல்களை பாடியவாறு பவனியில் பங்கேற்ற இறைமக்கள்.

பவனியில் பங்கேற்ற இறைமக்கள் கையில் குருத்தோலையை ஏந்தியவண்ணம் இறை பாடல்களை பாடியவாறு பெருமாள் தெரு, புதுரோடு, முத்தையமால் தெரு, மில் தெரு, பிரதான சாலை வழியாக அவரவர் ஆலயம் வந்து சேர்ந்தனர்.  தொடர்ந்து, இரு ஆலயங்களிலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

இதில், அருட்சகோதரிகள், பக்தசபையினர், பங்கு பேரவையினர், சி.எஸ்.ஐ ஆலய சபை ஊழியர், மாற்க் டைட்டஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்பட திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com