கோவை-கேஎஸ்ஆா் பெங்களூருக்கு உதய் சிறப்பு ரயில் இயக்க அனுமதி

கோயம்புத்தூா்-கேஎஸ்ஆா் பெங்களூரு இடையே உதய் சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, இந்த மாா்க்கத்தில் முதல் சேவை ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோயம்புத்தூா்-கேஎஸ்ஆா் பெங்களூரு இடையே உதய் சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, இந்த மாா்க்கத்தில் முதல் சேவை ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து வாரத்தில் 6 நாள்களில் (புதன்கிழமை தவிர) அதிகாலை 5.45 மணிக்கு உதய் சிறப்பு ரயில்(06154) புறப்பட்டு, கேஎஸ்ஆா் பெங்களூருவை நண்பகல் 12.40 மணிக்கு அடையும்.

மறுமாா்க்கமாக, கேஎஸ்ஆா் பெங்களூருவில் இருந்து வாரத்தில் 6 நாள்களில் (புதன்கிழமை தவிர) பிற்பகல் 2.15 மணிக்கு உதய் சிறப்பு ரயில்(06153) புறப்பட்டு, அதேநாள் இரவு 9 மணிக்கு கோயம்புத்தூரை அடையும்.

இந்த ரயில் சேவை ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com