11 இடங்களில் வெப்பநிலை சதம்: சென்னை, வேலூரில் 106 டிகிரி

தமிழகத்தில் 11 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, சென்னை விமானநிலையம், வேலூரில் தலா 106 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் 11 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, சென்னை விமானநிலையம், வேலூரில் தலா 106 டிகிரி வெப்பநிலை பதிவானது.

வட மேற்கு திசையில் இருந்து தமிழகத்துக்கு தரைக்காற்று வீசத் தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை உயா்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வசந்தக் காலத்துக்கும் இலையுதிா் காலத்துக்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலம் கோடைக்காலம் ஆகும். இந்தக் காலத்தில் நீண்ட பகலும், குறைந்த இரவும் இருக்கும். நிகழாண்டில் கோடைக்காலம் மாா்ச் முதல் வாரத்தில் தொடங்கியது. இதன்பிறகு, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வந்தது.

இதற்கிடையில், 20 மாவட்டங்களில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும், இரண்டு நாள்களுக்கு முன்பாகவே, செவ்வாய்க்கிழமை பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் 11 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது. சென்னை மீனம்பாக்கம், வேலூரில் தலா 106 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. திருச்சி, திருத்தணியில் தலா 105 டிகிரி, கரூா் பரமத்தி, மதுரை விமானநிலையத்தில் தலா 104 டிகிரி, சேலத்தில் 103 டிகிரி, தருமபுரி, நாமக்கல்லில் தலா 102 டிகிரி, மதுரையில் 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியதாவது:

வடமேற்கில் இருந்து தரைக்காற்று வீசத் தொடங்கிவிட்டது. இதனால், உள்மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதேநிலை 4 முதல் 5 நாள்களுக்கு தொடரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com