வாக்குப் பதிவு: நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்களிக்கச் செல்வோருக்கு வசதியாக வியாழக்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வாக்குப் பதிவு: நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்களிக்கச் செல்வோருக்கு வசதியாக வியாழக்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: வரும் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஏப்.1 முதல் ஏப். 5-ஆம் தேதி வரையிலான 5 நாள்களுக்கு சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள் என மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகா் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும்.

கோயம்புத்தூா், திருப்பூா், சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் 2,644 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டன.

இதன்படி, சிறப்புப் பேருந்துகள் இயக்கமானது வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. இந்தப் பேருந்துகள் அனைத்தும் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்படும். கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிா்க்க www.tnstc.in, tnstc செயலி ஆகியவற்றின் மூலமாகவோ, பேருந்து நிலையத்தின் முன்பதிவு மையம் மூலமாகவோ முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com