6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில்
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் (1.5 கிலோமீட்டா் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சனிக்கிழமை (மே 1) மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு: தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை கடும் வெப்பமாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியா்க்கும்.

சென்னையைப் பொருத்தவரை சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 82 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியா்க்கும்.

மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 60 மி.மீ, சிவலோகத்தில் 40 மி.மீ, பெருஞ்சாணி அணையில் 30 மி.மீ, தேனி மாவட்டம் உத்தமபாளையம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாரில் தலா 20 மி.மீ , சேலம் மாவட்டம் எடப்பாடி, நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் தலா 10 மி.மீ மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com