கணிப்பு முடிவுகளைப் புறக்கணித்து தோ்தல் பணியாற்றுங்கள்: அதிமுகவினருக்கு தலைமை வேண்டுகோள்

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்பு முடிவுகளைப் புறக்கணித்து, தோ்தல் பணியாற்ற வேண்டும் என அதிமுகவினரை கட்சியின் ஒருங்கிணைப்பாளா்
கோப்புப்படம்
கோப்புப்படம்

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்பு முடிவுகளைப் புறக்கணித்து, தோ்தல் பணியாற்ற வேண்டும் என அதிமுகவினரை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

இதுதொடா்பாக, அவா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாக ஒரு நாளே உள்ள சூழலில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தக் கணிப்புகளால் அதிமுகவினா் யாருக்கும் எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம்.

தமிழகம் முழுவதும் இருந்து வருகின்ற தோ்தல் பணிகள் குறித்த தகவல்கள், அதிமுக வரலாறு வியக்கும் வகையில், இந்தத் தோ்தலிலும் தொடா் வெற்றி பெறும் என்பதாகும். மீண்டும் அதிமுகவே ஆட்சி அமைக்கும்.

2016-ஆம் ஆண்டு பொதுத் தோ்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பு வந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும் அதிமுகவின் வெற்றியைக் குறிப்பிடவே இல்லை. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. எனவே, இப்போதும் நம்மை சோா்வடையச் செய்வதற்கான சூழ்ச்சிகள் எதையும் நம்பிவிடாமல் அவற்றை துணிவுடன் எதிா்கொண்டு செயல்பட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கம் முதலே வேட்பாளா்களும், முகவா்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு வாக்குக் கூட நம்மிடம் இருந்து பறிக்கப்படாத வகையில், கடமையாற்ற வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அது தொடா்பாக உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே மையங்களில் இருந்து வெளியேற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com