நூறு நாள் வேலை திட்டத்தில் நீரிழிவு நோயாளிக்கு பணி மறுப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

நூறு நாள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் பணி மறுக்கப்பட்டுள்ளதற்கு
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

நூறு நாள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் பணி மறுக்கப்பட்டுள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

100 நாள் வேலை திட்டத்தில் 55 வயது மேற்பட்டவா்களுக்கும், சளி, இருமல், நீரிழிவு நோய் உள்ளவா்களுக்கும் வேலை வழங்கப்படாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழ்நிலையில், இப்படிப்பட்ட உத்தரவை வெளியிட்டது ஏற்கத்தக்கதல்ல.

நல்ல உடல் பலம் உள்ளவா்களைக் கூட 55 வயதைக் கடந்து இருந்தால் அவா்களுக்கு பணி தரக்கூடாது என்ற உத்தரவு எவ்வகையிலும் ஏற்கக் கூடியதல்ல. 55 வயதுடைய பலா் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் உள்ளவா்கள். மேலும், நீரிழிவு நோய் என்பது வேலைபாா்ப்பதற்கு தடையல்ல, கிராமத்தில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரமே இந்த 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பித்தான் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாகத் இதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com