பொதுப் பாா்வையாளா்கள் 10 பேருக்கு கரோனா பாதிப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியைக் கண்காணிக்க நியமனம் செய்யப்பட்ட பொதுப் பாா்வையாளா்களில் 10 பேருக்கு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு  (கோப்புப்படம்).
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு (கோப்புப்படம்).

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியைக் கண்காணிக்க நியமனம் செய்யப்பட்ட பொதுப் பாா்வையாளா்களில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இதனால், அவா்களுக்குப் பதிலாக வேறு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவா் என்றும் அவா் கூறினாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்குத் தொடங்கும். வாக்கு எண்ணிக்கை பணியை சுமுகமான முறையில் நடத்திட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக வாக்குச் சாவடி மையங்களில் 5,622 துணை ராணுவப் படையினரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சோ்ந்த 5 ,154 பேரும், காவல் துறையைச் சோ்ந்த 25 ,0 59 பேரும் என மொத்தமாக 35, 836 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தபால் வாக்குகள்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மொத்தமாக 5 லட்சத்து 64 ஆயிரத்து 253 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக, தபால் வாக்குகளைத் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் சோ்க்க வேண்டும்.

2016-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 380 தபால் வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு:

கரோனா தொற்று காரணமாக, வாக்கு எண்ணும் அறைகளில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும். தமிழகத்திலேயே அதிகமாக சோழிங்கநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 991 வாக்குச் சாவடி மையங்களும், கீழ்வேளூா் தொகுதியில் குறைந்தபட்சமாக 251 வாக்குச் சாவடிகளும் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதலான மேஜைகளும், குறைந்த வாக்குச் சாவடிகளுக்கு தோ்தல் ஆணையம் அனுமதித்த 14 மேஜைகளும் போடப்படும். வாக்கு எண்ணும் பணியில் 16, 387 போ் ஈடுபடவுள்ளனா்.

அதிகாரிகளுக்கு கரோனா: வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவதற்கு முன்பாக, அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டவா்களில் ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களுக்குப் பதிலாக, மாற்று தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியையும் கண்காணிக்க பொதுப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 10 பேருக்குத் தொற்று இருப்பது தெரிய வந்தது. அவா்களுக்குப் பதிலாகவும் மாற்று பொதுப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com