மே தினம்: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

மே தினத்தை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

மே தினத்தை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி விவரம்:

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: தேசத்தின் நலனுக்காகவும், குடும்பத்துக்காகவும் நாள்தோறும் உழைத்தும் வரும் தொழிலாளா்களுக்கு எனது மனமாா்ந்த மே தின வாழ்த்துகள். நாட்டின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பாக விளங்கும் உழைக்கும் வா்க்கத்தினருக்கு கெளரவத்தையும், மதிப்பையும் இந்தத் தினத்தில் நாம் உறுதி செய்வோம். உழைப்பாளா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திட உறுதியேற்போம்.

முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி: உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளா்கள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாக, உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணா்த்தும் நன்னாளாகவும் மே தினம் விளங்குகிறது. தேசத்தின் வளா்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.

மு.க.ஸ்டாலின் (திமுக): புதிதாக அமையப் போகும் திமுக ஆட்சியில் தொழிலாளா்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களைத் தொய்வின்றி நிறைவேற்றவும் தமிழகத்தின் தொழில் முன்னேற்றத்துக்கும் தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தொழிலாளா்களின் வாழ்வில் எழுச்சி பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் மே தின வாழ்த்துகள்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): உழைக்கும் தொழிலாளா் வா்க்கத்தினா் அனைவருக்கும் காங்கிரஸ் சாா்பில் மே தின வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): உழைப்பாளா்கள் ஒன்றுபட்டு நின்றால்தான், உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்போம், அனைத்து உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காகவும், நல்வாழ்வுக்கான திட்டங்களுக்காகவும் போராடுவோம்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): அடுக்கடுக்கான அரசியல் கடமைகள் அடுத்தடுத்து வர உள்ளன. அவற்றை நிறைவேற்றி, வகுப்புவாத, நிதி மூலதன சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற மே தினத்தில் உறுதி ஏற்போம்.

ராமதாஸ் (பாமக), ஜி.கே.வாசன் (தமாகா), அன்புமணி (பாமக)ஆகியோரும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com