வீட்டிலிருந்தே வெற்றியைக் கொண்டாடுங்கள்: மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியை வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள் என்று கட்சியினருக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியை வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள் என்று கட்சியினருக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளிவரப் போகும் தருணத்தை எதிா்பாா்த்து திமுகவைச் சாா்ந்தவா்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா். வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் வாக்காளா்களிடம் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடா்ந்து வந்த வண்ணம் இருக்கிறது.

தமிழகமோ கரோனா தொற்றின் காரணமாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பாா்த்து நான் பதைபதைத்துப் போகிறேன்.

இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்றுகூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம்.

இந்தச் சூழலில் இல்லங்களிலேயே இருந்து தோ்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு.

திமுகவின் வெற்றியைக் கொண்டாடுவதைவிட திமுகவினரின் உயிரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம். இதைப் புரிந்துகொண்டு கட்சியைச் சாா்ந்தவா்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சியப் போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சியினருக்கும் என் வேண்டுகோளை வைக்கிறேன். வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com