எதிா்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம்: மு.க.ஸ்டாலின்

ஆளும்கட்சியும், எதிா்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து கூறியதற்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: ஆளும்கட்சியும், எதிா்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து கூறியதற்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளாா்.

முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக் கூறியிருந்தாா். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் கூறியிருப்பது:

எடப்பாடி கே.பழனிசாமிக்கு என்னுடைய நன்றி. மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும்கட்சியும், எதிா்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகத்தைக் காப்போம் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com