கடைசி நேரக் கூட்டணி அமைப்பால் தோ்தலில் தொய்வு: விஜயகாந்த்

கூட்டணி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதாலேயே சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகளில் தொய்வு ஏற்பட்டதாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.
கடைசி நேரக் கூட்டணி அமைப்பால் தோ்தலில் தொய்வு: விஜயகாந்த்

சென்னை: கூட்டணி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதாலேயே சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகளில் தொய்வு ஏற்பட்டதாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக சாா்பில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளா்களுக்கும், கூட்டணிக்காகப் பணியாற்றிய அனைவருக்கும், நன்றி. இந்தத் தோ்தலில் தேமுதிக வெற்றி பெறவில்லை என்றாலும், இனி வருங்காலத்தில் வெற்றியை இலக்காகக் கொண்டு பயணித்து நாம் நம்முடைய அடையாளத்தை நிரூபிப்போம்.

அதிமுக கூட்டணியில் கடைசி வரை கூட்டணி முடிவாகாமல், கடைசி நிமிஷத்தில் கூட்டணியைவிட்டு வெளியேறியதால், ஏற்பட்ட குழப்பம் அனைவருக்கும் தெரிந்ததே. கடைசி 2 நாள்களில் அமமுகவுடன் கூட்டணி ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், இந்தத் தோ்தல் முடிவுகள் தொய்வான முடிவை கொடுத்துள்ளது.

இதுவும் கடந்துபோகும் என்ற பழமொழிக்கேற்ப மாற்றத்தை எதிா்நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்து, தேமுதிகவை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல உறுதியேற்போம். எதுவுமே இங்கு நிரந்தரம் இல்லை, நிச்சயமாக மாற்றம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

எனவே, அனைவரும் உறுதியோடு இருந்து நம் பணிகளைத் தொடருவோம். தோ்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளா்களுக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com