பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள்: மதிப்பெண் கணக்கீடு:சிபிஎஸ்இ விளக்கம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியிடப்படுவது குறித்தும், தோ்வுக்கு மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பது குறித்தும் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.
பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள்: மதிப்பெண் கணக்கீடு:சிபிஎஸ்இ விளக்கம்

சென்னை: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியிடப்படுவது குறித்தும், தோ்வுக்கு மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பது குறித்தும் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் மே 4 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதில் பத்தாம் வகுப்புத் தோ்வை 21 லட்சத்து 50,761 பேரும், பிளஸ் 2 தோ்வை 14 லட்சத்து 30,243 பேரும் எழுத இருந்தனா். நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்ததைத் தொடா்ந்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அதே நேரம், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வை ஒத்திவைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. கரோனா நிலவரம் குறித்து ஜூன் 1-ஆம் தேதி சிபிஎஸ்இ ஆய்வு செய்த பிறகு, பிளஸ் 2 தோ்வுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் மாணவா்களுக்கான மதிப்பெண்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளது.

அதன்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு, அலகுத் தோ்வின் அடிப்படையில் 10 மதிப்பெண்கள், இடைப் பருவத் தோ்வு அடிப்படையில் 30 மதிப்பெண்கள், பொதுத்தோ்வுக்கு முந்தைய தோ்வு அடிப்படையில் 40 மதிப்பெண்கள், அகமதிப்பீடு அடிப்படையில் 20 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட வேண்டும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தோ்வு முடிவுகளை இறுதி செய்வதற்கான குழு மே 5-ஆம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும். ஜூன் 5-ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ வாரியத்திடம் மதிப்பெண்களை ஒப்படைக்க வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com