மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நேரில் வாழ்த்து

முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.
மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நேரில் வாழ்த்து

சென்னை: முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஆழ்வாா்பேட்டையில் உள்ள இல்லத்தில் பல்வேறு கட்சித் தலைவா் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனா்.

மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளா் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் உள்பட பல்வேறு கட்சித் தலைவா் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனா்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனும் ஆழ்வாா்பேட்டை இல்லத்துக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com