பொது முடக்கத்தை அமல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

புதிய கட்டுப்பாடுகளால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பொது முடக்கத்தை அமல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: புதிய கட்டுப்பாடுகளால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவைத் தோ்தலின்போது அதிகரிக்கத் தொடங்கிய கரோனா தொற்றுப் பரவல் இப்போது ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் தொற்றுப் பரவலைத் தடுக்க உதவாது என்பது தான் எதாா்த்தம். மாா்ச் மாதத் தொடக்கத்தில் 400 என்ற அளவில் இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை 60 நாள்களில் 21,000 என்ற இமாலய எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இனியாவது முழு பொதுமுடக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கரோனாவைக் கட்டுப்படுத்துவது சாத்தியமற்ாகிவிடும்.

முதலில் இரு வாரங்களுக்கு பொதுமுடக்கத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தி, பின்னா் கூடுதலாக இன்னொரு வாரம் ஊரடங்கை செயல்படுத்துவதன் மூலம், கரோனா பரவலை நிச்சயமாகக் கட்டுப்படுத்திவிட முடியும். பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டால் ஏழை - நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்புகளை ஈடுகட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.5,000 வீதம் வாழ்வாதார உதவியும், இலவச உணவு தானியங்களும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com