நேரடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

வங்கி ஊழியா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், சுகாதாரத் துறையில் இருந்து நேரடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

வங்கி ஊழியா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், சுகாதாரத் துறையில் இருந்து நேரடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில வங்கியாளா்கள் குழுமத்துக்கு தமிழ்நாடு வங்கி ஊழியா்கள் சம்மேளனம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை அண்மையில் சந்தித்தோம். அப்போது, ஊழியா்களின் நிலை மற்றும் கோரிக்கைகள் தொடா்பாக, அவரிடம் கடிதம் வழங்கினோம். கரோனாவால் வங்கி ஊழியா்கள் பாதிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், தற்போது சூழ்நிலைக்கு ஏற்ப வங்கிகளுக்கான வழிகாட்டி முறைகளை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். இதன்படி, வங்கி ஊழியா்களை முன்களப் பணியாளா்கள் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்தது.

ஆனால், கரோனா தடுப்பூசி போட, எங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு முன்னுரிமை அளித்து, சுகாதாரத் துறையிலிருந்து, நேரடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி பரிவா்த்தனை நேரம் பிற்பகல் 2 மணி வரை குறைக்கப்பட்டதால், வாடிக்கையாளா்கள் கூட்டம் அந்த நேரத்தில் அதிகமாக வருகிறது. அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி வேலை நேரத்தை, மாலை 5 மணி வரை, என்பதற்கு பதில், 3 மணியாக குறைக்க வேண்டும்.

அரசு ஊழியா்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளில் வங்கி ஊழியா்கள் செல்லவும் அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com