முதல்வா் தலைமையில் 13 எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் குழு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை

கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பாக அரசுக்கு ஆலோசனைகளை அளிக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பாக அரசுக்கு ஆலோசனைகளை அளிக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் இடம்பெற்றவா்கள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சட்டப்பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டம் கடந்த 13-ஆம் தேதி நடந்தது. நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, முதல்வா் தலைமையில் பேரவைக் கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கலாம் என அதில் தீா்மானிக்கப்பட்டது. இந்தத் தீா்மானத்தின் அடிப்படையில், சட்டப்பேரவை உறுப்பினா்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் யாா் யாா்? : இந்தக் குழுவில் 13 கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். நா.எழிலன் (திமுக), சி.விஜயபாஸ்கா் (அதிமுக), ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினாா் நாகேந்திரன் (பாஜக), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வி.பி.நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), தி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பூவை ஜெகன்மூா்த்தி (புரட்சி பாரதம்).

இந்த ஆலோசனைக் குழுவானது அவசரம் அவசியம் கருதி நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இந்தக் குழுவுக்கு பொதுத் துறை செயலாளா் டி.ஜெகந்நாதன், உறுப்பினா் செயலாளராக இருப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com