தமிழகத்துக்கு மேலும் 2 ஆக்சிஜன் ரயில்கள் வந்தன

ஒடிஸாவில் இருந்து மேலும் 2 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தன.
தமிழகத்துக்கு மேலும் 2 ஆக்சிஜன் ரயில்கள் வந்தன

ஒடிஸாவில் இருந்து மேலும் 2 ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தன.

தமிழகத்துக்கு முதல் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரயில் மேற்கு வங்க மாநிலம் துா்காபூரில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கு மே 14-ஆம் தேதி வந்தடைந்தது. இந்த ரயிலில் 80 மெட்ரிக் டன், ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து திருவள்ளூருக்கு மே 15-ஆம் தேதி வந்த 2-ஆவது ரயிலில் 31.4 மெட்ரிக் டன், ஜாா்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வந்த 3-ஆவது ரயிலில் 40 டன் ஆக்சிஜன் வந்தது.

ஒடிஸாவில் இருந்து 4, 5-ஆவது ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்தன.

ஒடிஸா மாநிலம் கலிங்காநகரில் உள்ள டாடா ஸ்டீல் சைடிங்கில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கு திங்கள்கிழமை வந்த 4-ஆவது ரயிலில் 80 மெட்ரிக் டன்,

ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டன் நிலையத்துக்கு வந்த 5-ஆவது ஆக்சிஜன் ரயிலில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்துவரப்பட்டது. இந்த ஐந்து ரயில்கள் மூலமாக, தமிழகத்துக்கு 310.22 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com