சென்னையில் தனியார் ஆய்வகத்தின் கரோனா பரிசோதனை உரிமம் ரத்து

கரோனா தொற்று இல்லாத 4 ஆயிரம் பேரின் முடிவுகளை தொற்று உடையவர்கள் என மாற்றி அறிவித்த தனியார் சோதனை மையத்தின் அனுமதியை பொது சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது.
சென்னையில் தனியார் ஆய்வகத்தின் கரோனா பரிசோதனை உரிமம் ரத்து

கரோனா தொற்று இல்லாத 4 ஆயிரம் பேரின் முடிவுகளை தொற்று உடையவர்கள் என மாற்றி அறிவித்த தனியார் சோதனை மையத்தின் அனுமதியை பொது சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் பரிசோதனை மையத்தில் கடந்த 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கரோனா தொற்று இல்லாத 4 ஆயிரம் பேரின் முடிவுகளை தொற்று உடையவர்கள் என மாற்றி அறிவிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட மாதிரிகளை கள்ளகுறிச்சியில் எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தொற்று உறுதியானவர்களின் விவரங்கள் முழுமையாக பெறப்படவில்லை என்றும் இதனால் அவர்களை கண்டறிவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தவறான முடிவுகளை வழங்கிய அந்த தனியார் பரிசோதனை மையம் ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றும் வெளிமாநில மாதிரிகளை தமிழகத்தில் சேர்த்ததால் மாநில அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாழாக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த நிறுவனத்தின் தவறான முடிவுகள் மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும், இதுபோன்ற தவறான முடிவுகளை அளித்து தொற்றில்லாதவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் மருத்துவமனையுடன் சேர்ந்து அந்த நிறுவனம் செயல்பட்டாத என்கிற சந்தேகம் எழுந்துள்ளாதகவும் தெரிவித்துள்ளார். தவறான முடிவுகளை வழங்கியதால் அந்த தனியார் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும், இதுகுறித்து 3 நாட்களுக்குள் அந்த மையம் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com