பொதுமுடக்க தடையை மீறி ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காய்கறிச் சந்தை

தடையை மீறி , ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே தற்போது வார, காய்கறிச் சந்தை தடையை மீறி, தொற்று பரவும் வகையில் நடந்து வருவதால் அப்பகுதி மக்களிடையே கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமுடக்க தடையை மீறி ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்று வரும் வார, காய்கறிச் சந்தை
பொதுமுடக்க தடையை மீறி ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்று வரும் வார, காய்கறிச் சந்தை

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குள் பட்ட, கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி ஊராட்சி கெங்கவல்லியிலிருந்து வீரகனூர் சாலையில் உள்ள ஆணையாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காய்கறி வாரச்சந்தை தற்போது வெள்ளிக்கிழமை காலை முதல் நடைபெற்று வருகிறது. 

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த இரு நாள்களுக்கு முன்னர், காய்கறி சந்தைகளுக்கு தடை விதித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உழவர் சந்தைகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடையை மீறி , ஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே தற்போது வார, காய்கறிச் சந்தை தடையை மீறி, தொற்று பரவும் வகையில் நடந்து வருவதால் அப்பகுதி மக்களிடையே கரோனா  தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஆணையாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சந்தையை கலைக்க அவர்களிடம் அறிவுறுத்தியும் சந்தை கலைக்கப்படாமல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com