பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு: அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

இதன்பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

சென்னை சிபிஎஸ்இ பள்ளியில் மாணவிக்கு பாலியல் புகார் குறித்து விசாரணை செய்து அறிவுறுத்தப்படும். 

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் - மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிட இருக்கிறது. 

மேலும், மாநிலப் பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும். ஏற்கெனவே பள்ளிகளில் 'விசாகா கமிட்டி' உள்ளது. பெண் ஆசிரியர் ஒருவர் இதற்கு தலைமை வகிப்பார். விசாகா கமிட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளதா, செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இனி பிரச்னை வராமல் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

பிளஸ் 2 பொதுத்தேர்வு வரைவு அறிக்கை தயாராக உள்ளது. முதல்வர் ஒப்புதலுக்குப்பின்னர் முறையாக மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com