துறையூரில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு மையம்: கே.என்.நேரு

துறையூர் நகரில் ஆக்ஸிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மையம் அமைக்க அமைச்சர் கே.என். நேரு உத்தரவிட்டார். 
துறையூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே என் நேரு.  உடன் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு
துறையூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே என் நேரு. உடன் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு

துறையூர் நகரில் ஆக்ஸிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மையம் அமைக்க அமைச்சர் கே.என். நேரு உத்தரவிட்டார். 

துறையூர் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை ஆய்வு செய்ய சென்ற நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். 

தொடர்ந்து கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கு மருத்துவமனையை அவர் ஆய்வு செய்த போது அங்கு போதிய இடவசதியில்லாததால் துறையூரில் தனியார் திருமணக் கூடத்தில் அல்லது பள்ளியில் ஆக்ஸிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்குமாறும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் பேசி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு தேவையான தண்ணீர் வசதி செய்து தரவும், கரோனா நோய் தொற்றின் தீவிரத்தை உணராமல் விழிப்புணர்வின்றி பச்சமலையில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சுய மருத்துவம் செய்து கொள்பவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களை அங்கிருந்து கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு அழைத்து வந்து மருத்துவ உதவி செய்யுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வலியுறுத்தினார்.

துறையூர் நகரில் சிடி ஸ்கேன் எடுக்க அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக அமைச்சரிடம் தெரிவித்த செய்தியாளர்களிடம் துறையூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் விரைவில் ரூ. 9 கோடியில் தரைதளம் மற்றும் மூன்று  மாடி கட்டடம் விபத்து சிகிச்சை மையம் அமைக்க உள்ளதாகவும் அதில் சிடி ஸ்கேன் வசதி அமைக்கப்படும் என்றார்.

தொடர்ந்து துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் 18 -44 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது பள்ளிக்கூடத்தில் இருந்த இடவசதியை பார்த்த பின்னர் ஆக்ஸிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அந்த பள்ளிக்கூடத்தில் அமைக்குமாறு கூறினார்.

அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏக்கள் காடுவெட்டி ந. தியாகராஜன்(முசிறி), செ.ஸ்டாலின்குமார்(துறையூர்), திருச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் ஒன்றியக்குழு தலைவர் சரண்யா, உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலர் முத்துசெல்வன், மாவட்ட பிரதிநிதி எம். மதியழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் மருத்துவர் லட்சுமி ஆகியோர் சென்றனர்.

முன்னதாக உடல்நலமின்றி இருந்த நகர செயலர் ந. முரளியின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com