காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவர் ஜயந்தி விழா

பக்தர்களால் மகா பெரியவர் என அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 128 வது ஜயந்தி விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மகா பெரியவர் அதிஷ்டானத்தில் சிறப்பு பூஜைகள் செய்த காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
மகா பெரியவர் அதிஷ்டானத்தில் சிறப்பு பூஜைகள் செய்த காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பக்தர்களால் மகா பெரியவர் என அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 128 வது ஜயந்தி விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சி சங்கர மடத்தின் 68வது மடாதிபதியாக இருந்து வந்தவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் பக்தர்களால் மகா பெரியவர் என அன்போடு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவரது 108வது ஜயந்தி விழாவை முன்னிட்டு சங்கர மடத்தில் உள்ள அவரது அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. 

காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் அபிஷேகத்தையும்,சிறப்பு தீபாராதனைகளையும் நடத்தினார். வேதவிற்பன்னர்களால் வேதபாராயணங்களும் நடந்தன.மகா பெரியவரின் அதிர்ஷ்டானம் வெற்றி வேர் மாலை மற்றும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகக்குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அன்னதானம்

காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக்குழு சார்பில் மகா பெரியவரின் ஜயந்தி உற்சவத்தை முன்னிட்டு 600 உணவுப் பொட்டலங்களும் தயாரிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.அன்னதானத்தை காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி,காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அன்னதானம் வழங்கும் நிகழ்வில் தொழிலதிபர்கள் வி.கேசவன்,தி.கிட்டப்பன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி.வி.ஜீவானந்தம் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com