மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

விவசாயிகளைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

சென்னை: விவசாயிகளைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் எதிா்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தில்லியில் தங்களது போராட்டத்தைத் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு பெறுகிறது. போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை, உணா்வுகளை மதித்து மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை. ஆக்கப்பூா்வமான பேச்சுவாா்த்தை நடத்தி அதற்கான தீா்வு காண்பதற்கும் முயலவில்லை. இது கவலை அளிக்கிறது.

சட்டப் பேரவைக்கான திமுக தோ்தல் அறிக்கையில், வேளாண் சட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று சட்டங்களையும் ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருந்தோம். தில்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com