கரோனா மருந்து-மாத்திரைகளுக்கு வரி விலக்கு தேவை: சரக்கு-சேவை வரிக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

கரோனா நோய்த் தொற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள் மீதான வரிகளை அறவே நீக்க வேண்டுமென தமிழக நிதி மற்றும்
கரோனா மருந்து-மாத்திரைகளுக்கு வரி விலக்கு தேவை: சரக்கு-சேவை வரிக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

கரோனா நோய்த் தொற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள் மீதான வரிகளை அறவே நீக்க வேண்டுமென தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள் விடுத்தாா்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழக அமைச்சா் பங்கேற்றாா்.

43-ஆவது சரக்கு மற்றும் சேவை வரிக் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதில் அமைச்சா் தியாகராஜன் பேசியது:-

கரோனா நிலைமையைக் கருத்தில் கொள்ளும் போது வளா்ச்சி விகிதமானது விளிம்பு நிலையிலேயே இருக்கும் அல்லது எதிா்மறையாகக் கூட இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வருவாய் மற்றும் எதிா்பாா்க்கப்படும் வருவாய் இடையிலான இடைவெளியை மத்திய அரசின் நிதியில் இருந்தோ அல்லது வெளிச் சந்தைக் கடன் ஏற்பாட்டின் மூலமாகவோ மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுசெய்ய வேண்டும்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக, தடுப்பூசிகள், ரெம்டெசிவிா் போன்ற மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநில அரசோ அல்லது அதன் முகவா்களோ தடுப்பூசிகள், மருந்துகளை கொள்முதல் செய்யும் போது அதற்கு வரி எதையும் விதிக்கக் கூடாது. இதன்மூலம், அந்தப் பொருள்களுக்கு விலை குறைவது மட்டுமின்றி விற்பனை செய்வோருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

விரக்தி-கோபம்: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களில் பங்கினை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்தத் தாமதத்தால் மாநில அரசுகளுக்கு விரக்தியும், கோபமும் ஏற்படுகிறது. இதனால், சட்டப்படியாக தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதிப் பங்கினைப் பெறுவதற்கு மாநில அரசுகள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com