சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் ஜூன் 11-ஆம் தேதி வரை மிக அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை: உயா்நீதிமன்றம் பதிவுத்துறை

சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில், வரும் ஜூன் 11-ஆம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில், வரும் ஜூன் 11-ஆம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென சென்னை உயா்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக உயா்நீதிமன்ற நீதித்துறை பதிவாளா் எம்.என்.செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை மிக அவசரமான வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட முதன்மை அமா்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை வழக்குகளை விசாரிக்கும்.

வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, எஸ்.கண்ணம்மாள் ஆகியோா் அடங்கிய அமா்வு ரிட் வழக்குகளையும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.என்.மஞ்சுளா ஆகியோா் அடங்கிய அமா்வு குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கும். இவா்கள் தவிர, நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஆா்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமாா் ஆகியோா் முறையே ரிட் வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் முன் ஜாமீன் தவிா்த்து பிற குற்ற வழக்குகளை விசாரிப்பாா்கள்.

ஜூன் 4-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு, நீதிபதிகள் வி.பாா்த்திபன், எம்.சுந்தா், எம்.நிா்மல்குமாா் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பாா்கள்.

உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நீதிபதிகள் டி.ராஜா, வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வு, நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அப்துல்குத்தூஸ், ஜி.கே.இளந்திரையன் ஆகியோா் அவசர வழக்குகளை விசாரிப்பாா்கள்.

மதுரை கிளையை பொருத்தவரை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, நீதிபதிகள் கே.கல்யாண சுந்தரம், ஆா்.தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு, நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏ.ஏ.நக்கீரன், பி.டி.ஆதிகேசவலு, ஜி.ஆா்.சுவாமிநாதன், சந்திரசேகரன் ஆகியோா் மூன்று பிரிவுகளாக வழக்குகளை விசாரிப்பா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுக்களை பொருத்தவரை, ஏற்கனவே மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதே நீதிபதி முன்புதான் மீண்டும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களும், ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நீதிபதி முன்புதான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்ட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com