நிறைவடைந்தது அக்னி நட்சத்திரம்: 13 இடங்களில் வெயில் சதம்

கோடைகாலத்தில் முக்கியமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோடைகாலத்தில் முக்கியமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இறுதிநாளில், தமிழகத்தில் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது.

கோடைகாலத்தில் மிக முக்கியமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் மே 4-ஆம் தேதி தொடங்கியது. இதன்பிறகு, பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்தது. காற்றின் ஒப்பு ஈரப்பதம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்தது. இதன்பிறகு, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகத்துக்கு தரைக்காற்று வீசியதால், உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயா்ந்தது. மேலும், அரபிக்கடலில் ‘டவ் தே’ புயல் உருவாகியதால், தென் மாவட்டங்களில் மழை பெய்து வெப்பநிலை குறைந்தது. இருப்பினும், வடமாவட்டங்களில் வெப்பநிலை இயல்பாக காணப்பட்டது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் வெள்ளிக்கிழமை (மே 28) நிறைவடைந்தது. இந்த இறுதி நாளில், தமிழகத்தில் 13 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது.

அதிகபட்சமாக, வேலூா், மதுரையில் தலா 105 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. மதுரை விமானநிலையத்தில் 104 டிகிரி, திருச்சியில் 103 டிகிரி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலூா், திருத்தணியில் தலா 102 டிகிரி, கரூா் பரமத்தி, தூத்துக்குடியில் தலா 101 டிகிரி, நாகப்பட்டினம், அதிராமப்பட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரி பதிவானது. வரும் இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (மே 29, 30) வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com