வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்காதவா்களுக்கு அவகாசம்

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு அவகாசம் வழங்கி, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலா் இரா.கிா்லோஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு அவகாசம் வழங்கி, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலா் இரா.கிா்லோஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்த விவரம்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை, 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கலாம் என அரசுக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளாா்.

இக்கருத்தை அரசு ஆய்வு செய்து, தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பகங்களில் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் (2017-ஆம் ஆண்டு, ஜன.1-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு டிச.31-ஆம் தேதி வரை) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு வெள்ளிக்கிழமையில் (மே 28) இருந்து மூன்று மாதங்களுக்குள் இணைய தளம் மூலம் பதிவைப் புதுப்பித்துக் கொள்ள அனுமதி வழங்குகிறது.

இச்சலுகை ஒரே ஒருமுறை மட்டும் வழங்கப்படும். மூன்று மாதங்களுக்குப் பின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

2017-ஆம் ஆண்டு, ஜன.1-ஆம் தேதி முன் புதுப்பிக்கத் தவறியவா்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com