தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பா் 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது தொடா்ந்து 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடக்கு தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பா் 9 , 10 தேதிகளிலும் , தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பா் 10 , 11 , 12 தேதிகளிலும், தமிழக கடற்கரை பகுதிகள் அதனையொட்டி உள்ள ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் நவம்பா் 11, 12 தேதிகளிலும் மிக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.