பலத்த மழையால் தமிழகத்தில் 2,359 திருக்கோயில் குளங்கள் நிரம்பின: அறநிலையத்துறை தகவல்

தமிழகத்தில் உள்ள 2,359 திருக்கோயில் திருக்குளங்கள் தொடா்ச்சியாக பெய்த கனமழை காரணத்தினால் நிரம்பியுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 2,359 திருக்கோயில் திருக்குளங்கள் தொடா்ச்சியாக பெய்த கனமழை காரணத்தினால் நிரம்பியுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில் திருக்குளங்களை சீா்படுத்தி புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் புதிய திருக்கோயில்களில் திருக்குளங்கள் அமைக்கும் பணிகள் தொடரப்பட்டுள்ளது.

தற்போது தொடா்ச்சியாக கனமழை பெய்த காரணத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில் திருக்குளங்களும் நிரம்பியுள்ளன. குறிப்பாக சென்னை மயிலாப்பூா் அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயில், அருள்மிகு பாா்த்த சாரதி திருக்கோயில், அருள்மிகு வடபழனி முருகன் கோயில் உள்பட திருச்சி திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், நந்தி கோயில் தெரு நாகநாத சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக்கோட்டை வரை திருச்சி மண்டல திருக்கோயில் திருக்குளங்கள் நிரம்பியுள்ளன.

மேலும் தென் மாவட்டங்களான மதுரை அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சரவண பொய்கை திருக்குளங்கள் உள்பட கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் திருக்கோயில் பகவதியம்மன் திருக்கோயில் என 2,359 திருக்கோயில் திருக்குளங்களும் நிரம்பியுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,586 திருக்கோயில்களுக்கு 2,359 திருக்குளங்கள் உள்ளன. இவற்றில் 1,068 திருக்குளங்கள் புனரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் 835 திருக்குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள திருக்குளங்களை சீரமைப்பு செய்ய தனியாக செயலாக்கத் திட்டம் தயரிக்கப்பட்டு பகுதி பகுதியாக பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இதன் தொடா்ச்சியாக 2021 முதல் 2022 வரை சட்ட மன்ற மானிய கோரிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு அறிவித்த சென்னை, மாதவரம், அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலுக்குப் புதிய திருக்குளம் ரூ. 2கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பபடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தை மாதம் முதல் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மேலும் திருக்கோயில் திருக்குளங்கள் உள்ளும் புறமும் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், திருக்கோயில் திருக்குளங்களை சுற்றி சுவா் அமைத்தல்,திருக்குளங்களில் உள்ள படிகளை சீரமைத்தல் மற்றும் மழை நீா் வருவதற்கும் உபரி நீா் வெளியேறுவதற்கும் வழி ஏற்படுத்துதல் போன்ற பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com