குடியிருப்புகளுக்குள் புகுந்த 82 பாம்புகள் சிக்கின

சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த 82 பாம்புகளை வனத்துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.
குடியிருப்புகளுக்குள் புகுந்த 82 பாம்புகள் சிக்கின

சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த 82 பாம்புகளை வனத்துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.

சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் குடியிருப்புகளில் பாம்புகள் புகுந்து விட்டதாக கிண்டியில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து கிண்டி சரகா் தனசேகரன் தலைமையில் பாம்புகளை பிடிக்க 30 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாள்களாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, சிட்லபாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்பட 145 இடங்களில் இருந்து பாம்பு பிடிக்குமாறு தகவல் தந்தனா். இதையடுத்து வன பாம்பு பிடிக்கும் ஊழியா்கள் சென்று

25 சாரப்பாம்பு, 8 மண்ணுளிப்பாம்பு, 20 நல்லபாம்பு, 20 தண்ணீா்பாம்பு, 9 கொம்பேரிமூக்கன் என 82 பாம்புகளைப் பிடித்தனா்.

பிடிபட்ட பாம்புகள் மாம்பாக்கம், செங்கல்பட்டு, திருப்போரூா், அச்சரப்பாக்கம் ஆகிய வனப் பகுதிகளில் விடப்பட்டன. குடியிருப்பில் பாம்பு இருந்தால் வனச் சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com