சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீப சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் ரூ. 36,000-யைத் தாண்டிய நிலையில் தற்போது ரூ. 37,000-யைத் தாண்டி அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 35,576 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று(செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.14 உயர்ந்து, ரூ.4,650-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.112 உயர்ந்து ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.50 -க்கும் , கட்டி வெள்ளி கிலோ ரூ71,500-க்கும் விற்பனையாகிறது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,650
1 பவுன் தங்கம்............................... 37,200
1 கிராம் வெள்ளி............................. 71.50
1 கிலோ வெள்ளி.............................71,500
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,636
1 பவுன் தங்கம்...............................37,088
1 கிராம் வெள்ளி............................. 71.50
1 கிலோ வெள்ளி.............................71,500