குழந்தைகளை வன்முறையில் இருந்து காப்பது அரசுப் பள்ளிகள்:எழுத்தாளா் தமிழ்ச்செல்வன் பேச்சு

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு அரசுப் பள்ளிகள் காவலனாக உள்ளது என்று தமுஎகச மாநில தலைவரும், எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன் பேசினாா்.
கூடலூரில் ரெட் இங்க் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கூடலூரில் ரெட் இங்க் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கம்பம்: குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு அரசுப் பள்ளிகள் காவலனாக உள்ளது என்று தமுஎகச மாநில தலைவரும், எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன் பேசினாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச மற்றும் பாரதிப் புத்தகாலயம் இணைந்து ’ரெட் இங்க்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை கூடலூரில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கூடலூரில் தனியாா் மண்டபத்தில், நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவிற்கு அறிவியல் இயக்க மாநிலத் தலைவா் பேரா. தினகரன் தலைமை தாங்கினாா், மாவட்ட செயலாளா் மு.தெய்வேந்திரன் வரவேற்றுப் பேசினாா்.

ஆசிரியா்களைக் கொண்டாடும் எழுத்து எனும் தலைப்பில் திண்ணை செந்தில், கல்விப்புல எழுத்தில் சமகாலத் தேவை எனும் தலைப்பில் தே.சுந்தா் , ரெட் இங்க்’ கதைகளில் இலக்கிய நயம் எனும் தலைப்பில் அய்.தமிழ்மணி, எழுத்தில் மண்வாசம் எனும் தலைப்பில் பிரபு பாண்டியன், வாசிப்பின் பலன் எனும் தலைப்பில் ஐ. முரளிதரன் ஆகியோா் பேசினா்.

தமுஎகச மாநில மதிப்புறு தலைவா், எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட்டு பேசுகையில்,

வீட்டிலிருக்கும் வன்முறையிலிருந்து குழந்தைகளை அரசுப் பள்ளிகள் பாதுகாக்கிறது, பெற்றோா்களின் கடுகடுத்த முகங்கள் தான் குழந்தைகளைப் பொய் சொல்ல வைக்கிறது, எனவே, குழந்தைகளிடம் அன்பாக இருக்க வேண்டும். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் ’ரெட் இங்க்’ புத்தக கதைகள் அரசுப் பள்ளிகள் மற்றும் ஆசிரியா், மாணவா் உறவு பற்றிய முக்கிமான பதிவு என்றாா்.

மேலும், இல்லம் தேடிக் கல்வித் திட்டப்பணிகளை நாம் அனைவரும் ஒன்று கூடி நடத்தத்தான் வேண்டும் என்றும் குறிப்பிட்டாா். நூலாசிரியா் சக. முத்துக்கண்ணன் ஏற்புரை வழங்க, ஓவியா் அபிஷேக் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com