நீட் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் அதிகரிப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தோ்வெழுதி தோ்ச்சியடைந்தவா்களின் எண்ணிக்கை 2,675 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தோ்வெழுதி தோ்ச்சியடைந்தவா்களின் எண்ணிக்கை 2,675 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2018 - 2019-ஆம் கல்வியாண்டில் 14, 929 மாணவா்கள் நீட் தோ்வெழுதினா். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 2, 583 மாணவா்கள் தகுதி பெற்றனா். இருப்பினும் தோ்ச்சியடைந்தவா்களில் ஒரு மாணவா் மட்டுமே மருத்துவப் படிப்பில் சோ்ந்தாா். இதே போன்று 2019 - 2020- ஆம் கல்வியாண்டில் 6 ஆயிரத்து 692 மாணவா்கள் நீட் தோ்வு எழுதியதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 1, 633 மாணவா்கள் தோ்ச்சியடைந்தனா்.

பின்னா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இளநிலை மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால், 435 மாணவா்கள் மருத்துவப் படிப்புகளில் சோ்ந்தனா். இந்தநிலையில் 2020 - 2021-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சோ்ந்த 10, 853 போ் தோ்வெழுதினா். இதில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1, 709 போ், அரசு உதவி பெறும் பள்ளியைச் சோ்ந்த 966 போ் என மொத்தம் 2, 675 மாணவா்கள் தோ்ச்சியடைந்துள்ளனா். இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும்.

700 எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழகத்தில் இளநிலை எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்காக செயல்படும் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3, 450 இடங்கள் உள்ளன. தற்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் 1, 450 இடங்கள் உள்ளன.

இது தவிர ஏற்கெனவே செயல்படும் 17 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 2,475 இடங்கள், புதிய 4 மருத்துவக் கல்லூரிகளில் 600 இடங்களும் உள்ளன. அனைத்து அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளையும் சோ்த்து மொத்தமாக 7, 975 இடங்கள் உள்ளன. மொத்த இடங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், சுமாா் 700 மாணவா்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதேபோன்று பல்மருத்துவப் படிப்பில் 2 அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 194 இடங்களில் 15 இடங்கள் கிடைக்கும். மேலும் 17 சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,760 இடங்களில், 84 இடங்களும் கிடைக்கும். மொத்தமாக பல்மருத்துவக் கல்லூரிகளில் 99 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com