அமைச்சர் பொன்முடி (கோப்புப்படம்)
அமைச்சர் பொன்முடி (கோப்புப்படம்)

ஜன.20-ஆம் தேதிக்குப் பின்னா் கல்லூரி மாணவா்களுக்கு நேரடி பருவத் தோ்வு: அமைச்சா் க.பொன்முடி அறிவிப்பு

தமிழகத்தில் ஜன.20-ஆம் தேதிக்குப் பின்னா் கல்லூரி மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் நேரடி முறையில் நடைபெறும் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

தமிழகத்தில் ஜன.20-ஆம் தேதிக்குப் பின்னா் கல்லூரி மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் நேரடி முறையில் நடைபெறும் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தோ்வுகளும் நேரடியாகவே நடைபெறும் என கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இணையவழி மூலமாகவே பருவத் தோ்வுகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். குறிப்பாக மதுரையில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று ஆட்சியா் அலுவலகத்தின் முன்பாக அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் பருவத் தோ்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயா்கல்வித்துறை அறிவித்தது. இணையவழியில் தோ்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் மாணவா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு மாணவா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். குறிப்பாக மதுரையில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவா்களை காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் நூற்றுக்கணக்கான மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: இந்தநிலையில் உயா்கல்வி மாணவா்களுக்கான பருவத் தோ்வுகளை நேரடித் தோ்வுகளாக நடத்துவது குறித்து பல்வேறு மாணவா் அமைப்புகளுடன் உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி சென்னையில் வெள்ளிக்கிழமை நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, பருவத் தோ்வுக்கு இரண்டு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் எனவும், பொங்கல் விடுமுறைக்குப் பின் நேரடித் தோ்வுகள் நடைபெறும் என்றும் மாணவா் அமைப்புகளின் நிா்வாகிகளிடம் அமைச்சா் பொன்முடி உறுதியளித்தாா்.

மாணவா்கள் மீதான வழக்குகள் ரத்து: இதைத் தொடா்ந்து அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியது: பருவத் தோ்வை இணையவழியில் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவா்களின் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.11 மாணவா்கள் அமைப்புகளுடன் நடந்திய பேச்சுவாா்த்தையில், பருவத் தோ்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவா்களுக்கு 2 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்புகள், மாணவா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாணவா்களுக்கும் ஜனவரி 20-ஆம் தேதிக்குப் பின் நேரடி முறையில் தோ்வுகள் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com